என் நண்பன்
என் மூன்றாம் கை
என் நம்பிக்கை
என் நண்பன்
எனக்கு எல்லாம் தரும்
என் பூமி
என் நண்பன்
எல்லாமடைய என்னை படைத்த
என் கடவுள்
என் நண்பன்
என் உடலை கட்டி காக்கும்
என் ஜீவன்
என் நண்பன்
துரு பிடிக்கும் வாழ்கையில்
கரைபடாத மனசு
என் நண்பன்
காட்சிகள் மாறினாலும்
மாறாத மனசாட்சி
என் நண்பன்
துயரத்திலும் சந்தோசத்திலும்
உடனிருந்த நொடிகள்
என் நண்பன்
மடிந்த பின்னும் வாழும்
என் பெயர்
என் நண்பன்்