thunbam

விழி மூடி உறங்க
வழி தேடி இருக்க
வலி இன்றி தடுக்க
துணை ஒன்று இல்லை

பகல் என்று நினைக்க
இருள் வந்து கனக்க
சுமை கொஞ்சம் குறைக்க
இணை இங்கு இல்லை.

தென்றல் என தீண்ட
புயல் அங்கு தோன்ற
மலர் முகம் காக்க
மனம் ஒன்று இல்லை.

எழுதியவர் : thenmozhi (26-Mar-17, 10:33 pm)
சேர்த்தது : தேன்மொழி
பார்வை : 96

மேலே