யார் அந்த தேவதை
ரோஜா மொட்டு போன்ற மழலை அவளிடமிருந்து அதன் தாயிடம் செல்ல மறுக்கும்போது-அவள் தேவதை ஆகிறாள்
குடும்பத்தில் குட்டி குழந்தை போல் கலாட்டா செய்யும்போது-அவள் தேவதை ஆகிறாள்
பெண் என்றிருந்தால் இவள் போல் வாழ வேண்டும் என்று பலர் கூறும்போது-அவள் தேவதை ஆகிறாள்
யாருமில்லா சமயம் தொலைக்காட்சியில் வரும் நடனங்களை முயற்சிக்கும்போது-அவள் தேவதை ஆகிறாள்
மெல்லியதாக பாடல் பாடிக்கொண்டே வீட்டை சுத்தம் செய்யும்போது-அவள் தேவதை ஆகிறாள்
கவலைகளை தன்னுள் அடக்கி புன்னகைக்கும்போது-அவள் தேவதை ஆகிறாள்
ஆண்களிடம் தன்னிலை தவறாமல் பழகும்போது-அவள் தேவதை ஆகிறாள்
தோழியின் கஷ்டத்தில் தன் தோள் கொடுத்து உதவும்போது-அவள் தேவதை ஆகிறாள்
இந்த துறை உனக்கு பொருந்தாது என்று சிலர் கூறியதை பொருட்படுத்தாமல் அதே துறையில் அவள் சாதிக்கும்போது-அவள் தேவதை ஆகிறாள்
தன்னுள் காத்த மற்றொரு உயிரை ஈன்றெடுக்கும்போது-அவள் தேவதை ஆகிறாள்
தன்னையும் மறந்து பொது சேவை செய்யும்போது-அவள் தேவதை ஆகிறாள்
கடமையனைத்தும் செய்துவிட்டு யாருக்கேனும் குறை வைத்திருப்பேனோ என்ற குறுகுறுப்பில் உயிர் விடும்போது-அவள் தேவதை ஆகிறாள்
அவள் யாரோ அல்ல,
உங்கள்
தாயாகவோ,தங்கையாகவோ,
தோழியாகவோ,
காதலியாகவோ,
மனைவியாகவோ,மகளாகவோ
உங்களுடனே,உங்களுக்காகவே,
உங்களுள் வாழ்ந்து கொண்டிருகிறாள் அந்த தேவதை!!!
-என்றும் அன்புடன் ஷாகி