நிரந்தரம் நோக்கி
பாலினுள் நெய் தூங்கிக்கிடக்கும்.
தட்டிஎழுப்ப கொதித்து ஆரவேண்டும்
ஆடை கட்டிய பாவைப்பாலை.
என்னைக் கொளுத்திப் போட்டு
கடைந்தபொழுது கண்ணுற்றேன்,
உன் மனதினில் உறைந்து கிடந்த
என், இன்பம் கலந்த நினைவுகளை.
உளம்கனிந்த நிலை மாறிட்டேன்,
இனி நடை பயிலும் நிமிடங்களில்
நலம் பயிப்போம் தனிமையில்.
கடமைகள் எல்லாம் கடந்து
எல்லைகட்டி நிற்க, தனிமையில்
இன்பமாயே துயில்கிறேன்.
உன் தடம் நோக்கிய பாதையில்
உன் அன்பு வழி ஆணையை
எதிர்நோக்கியே நிற்கிறேன்.
மனமுவந்து அழைத்தால்!
வந்துவிடுவேன் உன்னிடமே
நிரந்தரப் பணிக் கூட்டாளியாய்.