செக்கிழுத்த செம்மல்... வ . உ . சி ........
ஓட்டப்பிடாரம் ஊரில் பிறந்து - ஆங்கில
கோட்டைசுவற்றின் குடியை உடைத்தவன்...
உலகநாதன் பிள்ளை பார்வதி பெற்று
சீராட்டி வளர்த்த செல்வப்புதல்வன் ....
சட்டத்துறையில் பட்டம் பெற்றவன் - பல
சங்கஇலக்கியம் அறிவாய் கற்றவன் ...
வ.உ. சிதம்பரம்பிள்ளை இயற்பெயர் - மக்கள்
வழங்கியபெயர்தாம் எத்தனை எத்தனை ?
செக்கிழுத்த செம்மலும் இவனே - முதல்
கப்பலோட்டிய தமிழனும் இவனே !
திலகரின் போராட்ட தீரம் கண்டு - நீ
விடுதலைப்போரில் வேட்கை கொண்டாய் ...
வந்தேமாதர முழக்கத் துணிகள் - வீடு
வீதிகள்தோறும் தொங்கிட செய்தாய்....
சுதேசிநாவாய் சங்கம் கண்டாய் - என்றும்
சுதந்திரக்கனவை நெஞ்சில் கொண்டாய் ....
இரட்டை ஆயுள் தண்டனைதந்த - அந்த
நீதிபதியே உன்னை புகழ்ந்தார்...
திருக்குறள் மணக்குடவர் உரைபதித்தாய்
சாந்திக்குமார்க்கம் தத்துவநூல் தந்தாய்..
ஒருநாடு உரிமை பெற்றுவிளங்கிட - இரு
காரணம் கண்டு கருத்தாய்வாழ்ந்தாய் ,
பொருளாதார சுரண்டலை ஒழித்து -தாய்
மொழியின் வாயிலாய் கற்றிடசொன்னாய் ....
தூத்துக்குடியில் இன்று துறைமுகமாம் - அதற்கு
உந்தன் பெயர்தான் அறிமுகமாம்..
உன்விடுதலை வெள்ளம் கண்டதுபாடநூல் - காலம்
பலதாண்டிவாழுமே என்றென்றும் நின்புகழ்.......