இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை...
உரிமை இல்லாத வாகனத்தில்....!
உரிமை உள்ளது போல் உரிமையோடு உரசி புகைப்படம்தான் எடுப்போமே....!
வாரத்தின் ஒரு நாளாவது கண்களை மெல்ல மூடத்தான் நினைப்போமே.....!
ஆனால் அன்று ஒரு நாளாவது தன் நண்பனை பார்ப்போமா என்று நினைப்போமே.....!
அந்த ஒரு நாளும் கண்களை மூட மறப்போமே......!
ஏனடா இந்த வாழ்க்கை என்று தனக்குள்ளே ஓர் கேள்வியை கேட்போமே.....!
பண்டிகை காலத்திலும் வேலை செய்வோமே....!
பழைய நினைவுகளையும் பல நினைவுகளையும் எண்ணித்தான் முகம் சுளிப்போமே.....!
சிக்கனமாக செலவு செய்து சில்லறைகளை சேர்ப்போமே....!
பனிக்கட்டியில் உறைந்த பழைய கோழி,மீன்களையே உணவாக புசிப்போமே....!
வெயில் காலத்தில் வெயிலில் வெந்து தான் போவோம்.....!
குளிர் காலத்தில் குளிரில் விரைத்துப்போனோம்....!
இனி வெளிநாட்டு வாழ்க்கை வேண்டாம் என்று நினைத்துதான் பார்ப்போம்...!
ஆனால் கடனை எண்ணித்தான் விமானத்தில் மீண்டும் பறப்போமே...!
கஷ்ட்டங்களை பல கண்டு கடந்து பணத்தைதான் சம்பாரித்தோம்......!
வெளி நாட்டிலேயே காலத்தை கழிப்போம்....!
நாடு திரும்பும் போது எங்கள் இளமையையும்தான் துளைப்போமே.....!
வெளிநாட்டால் பல இன்பங்களை துளைப்போமே......!
ஆனால் ஊரார் உறவார் எண்ணங்களில் மட்டும் வெளிநாட்டு சம்பாரித்தான் என்ற பெயரோடு மனதில் நிலைப்போமே....!