அயல்நாட்டு அகதிகள்

உல்லாசமாக இருந்த நாட்டை விட்டு இங்கு உரிமை
இழந்து சுற்றி திரிகிறோம் இன்னொரு நாட்டில் .
இதயம் கனத்து கனவுகள் கொண்டு இங்கே வந்து
மகிழ்ச்சி மறந்து சிரிப்பை துறந்து வாழ கற்றோம் .
தினம்தினம் தொலைபேசி உரையாடலில்
தொலைந்த சிரிப்பை தேடுகிறோம் உறவுகளிடம் .
கண்களில் கண்ணீர் கொண்டும் வார்த்தைகளில் மகிழ்ச்சி கொண்டும்
நீள்கிறது எங்கள் தொலைபேசி உரையாடல்கள் பல நேரம் .
தினம்தினம் ஓடும் வாழ்கையில் நித்தம்நித்தம் வருகிறது வீட்டு ஞாபகம்
வெளியே அழுதாள் வெட்கம் என்று கண்ணீர்க்கு கூட கரைஅடைப்பு செய்யப்படுகிறது .
இருந்தும் ,விழிகளில் கனவுகள் சுமந்து இதழ்களில் சிரிப்பை கொண்டு
எங்கோ ஒரு மூலையில் வாழ்த்து கொண்டு தான் இருக்கிறோம் அயல்நாட்டு அகதிகளாக .

எழுதியவர் : திவ்ய ஸ்ரீ (29-Mar-17, 1:01 pm)
சேர்த்தது : divya shri
பார்வை : 69

மேலே