விருப்பம் தெரிவிக்கும் தருணம்...

காதல்..
என்னும் மூன்றெழுத்து வார்த்தை,
நான் உன்மேல் கொண்ட நேசத்தை எடுத்துரைக்கும் வல்லமை படைத்ததாக தோன்றவில்லை...


என் நேசத்தை எடுத்துரைக்கும்
வார்த்தைத் தேடியழைந்தேன்...
வார்த்தை கிட்டும் முன் உணர்ந்தேன்..
வாய் மொழி கூறி காற்றில் கலப்பதை விட,
சிறு பார்வையொன்றில் உன் விழியில் தோன்றி, நெஞ்சில் கலப்பது மேல் என்று...

என் எண்ணம் புரிந்தவளாய்,
புன்னகை பூத்துச்சென்றால்...

எழுதியவர் : அனு (29-Mar-17, 12:18 pm)
சேர்த்தது : அனு
பார்வை : 62

மேலே