வர்ணனைகள்
காற்றும் கவிப்பாடுதடி
காலின் ஓசையை கேட்டு
நண்டும் நடனமாடுதடி
நடக்கும் காலின் கொலுசொலி கேட்டு
காக்கையும் கலைவாசிக்குதடி
காதோரத்தின் இசையை கேட்டு
ஆட்டுகுட்டியும் ஆசைப்படுதடி
அழகான முத்தம் கேட்டு
பேடைக்குயிலும் பேணிகாக்குதடி
பேசும் பேச்சைக் கேட்டு
மான்களும் மரம் ஏறுதடி
மன்னிக்கும் மனசைப் பார்த்து
என் மனமும் துள்ளுதடி
உன் இதயத்தின்
ஒரு அறையாவது திறக்காத என்று..