பிடிக்குதே
பிடிக்குதே :
உனக்குப்
பிடித்தப் பாடலையெல்லாம் தேடித்தேடிக் கேட்டு இரசிக்கிறேன்,
பிடித்த உணவையெல்லாம் சமைத்துப் பார்க்க நினைக்கிறேன்,
பிடித்தப் புத்தகமெல்லாம் வேண்டி வாங்கிச் சேர்க்கிறேன்,
பிடித்த உடை மீண்டும் மீண்டும் உடுத்திப் பார்க்கிறேன்,
பிடித்த வசனம் ஓயாமல் பேசிப் பேசிச் சிரிக்கிறேன்,
பிடித்தக் காட்சி எதுவென்று நாள்தோறும் சேர்த்து சேர்த்து வைக்கிறேன்,
பிடித்தப் பரிசு ஒவ்வொன்றாய் தேர்வு செய்ய முனைகிறேன்,
உன் ஆசை ஆயிரம் சேர்த்து என் ஆசைகளாய் நிறைகிறேன்,
உனக்குப் பிடித்த யாவும் எந்தன் விருப்பமாக ஏற்கிறேன்.
உனை மட்டும் பிடித்ததால் என்னவோ உன் விருப்பம் எல்லாம் எனக்கும் பிடிக்குதே....