கொதி நீரில் உலைஅரிசி

கழுவிக் கலங்கலான
கருவிழிகள்...
ஈரம் கசிய விடாத
எருவாட்டிகளின்
மயானக் கரும்புகை
புகைத்துக் கரைந்ததில்
கடைசியாய்
தூக்கி எறியப்ப் பட்ட
துண்டுப் பீடிகள்
பாலுக்கு அழுகும்
பத்தாவது குழந்தை
இன்னும்
சில
கிராமக் கடைசியில்
வெட்டியான்களின்
வியர்வை
குளிக்கிற
பணக்கார
புதை குழிகளின்
சிலுவை அடையாளங்களோடு
கொதித்துக் கொண்டே தான்
கிடக்கிறது
தலை முறை கடந்தும்
சாதிப்
பெருந்தீ
வாய்க்கரிசிக்ளில்
கொதிக்கிற
மயானச் சிதைகளும்...