எச்சரிக்கை
கடலலைகளின் சுழற்சி விஷ்வரூபமெடுக்க,
ஒவ்வொரு அலையும் உயர்ந்தது சுட்டெரிக்கும் சூரியனை அணைத்துவிட எண்ணி....
சூரியனைத் தொட்டுவிட இயலுமா?
என்றே எண்ணினாலும் கடலலையின் வேகமோ, உயரமோ குறையவே இல்லை....
நேரம் ஆக, ஆக ஊருக்குள் ஓரு பனையளவு நீர் புக,
சிக்கியதெல்லாம் சின்னாபின்னமாக,
எஞ்சியதெல்லாம் உயரம் தேடி ஓட,
வேடிக்கைப் பார்த்த சூரியனும் கோபம் கொள்ள,
கடல் பொங்கி உலகை அழிக்க போகுதோ? என்றெண்ணி, கடலருகில் இல்லாத மக்களும் கதிகலங்கி நிற்க,
நின்றுவிடுமா சுனாமி? என்றே எதிர்பார்க்கையில்,
கடல்நீரை பலரும் பலவாறு தூற்ற, நீரை காலால் தள்ளி விளையாடுதல் போலே,
கடல்நீரைத் தள்ளியே
காற்றும் சிரித்து விளையாட,
ஏனிந்த சோதனை என்று புலம்பியவர்களில் பணக்காரன், ஏழையென்ற பாகுபாடோ,
சாதி, மத, இன அடிப்படையிலே உயர்ந்தவன், தாழ்ந்தவனென்ற பாகுபாடோ,
தெரியாது போக,
யாவரும் பதறினார்கள் தங்களுயிர்கள் பறி போகுமோ? என்றே....
"யாரடா நீ மானிடா, இயற்கையைத் துட்சமென்றெண்ணி, யாவற்றையும் மாசுபடுத்தி, வளங்களையெல்லாம் சுரண்டிப் பிழைக்கிறாயே..
உன்னைத் தடுக்க, தட்டிக்கேட்க யாருமில்லையென்ற தைரியமா??
இயற்கை உன்னைத் தட்டினால், நீ இருந்த இடம் தெரியாது போவாய்.....