இல்லாத தொடர்பு..
உண்ணா விரதம் இருக்கின்றது
என் தொலைபேசி
உன் அழைப்புக்கள் இல்லாமல்...
தியாகியாக எத்தனிக்கும் என் காதல்
வியாதிபிடித்துக் கிடக்கிறது.
விபரங்கள் அறியாமல்
விழிகள் மட்டும் கரைகிறது.
யாருக்கோ வரும் அழைப்புக்களை- என்
செல்போனில் பார்க்கின்றேன்.
செல்விழுந்த குழியாக
பின்வாங்கிச் செல்கின்றேன்.
இலக்கம் மாற்றி இலக்குவைத்தால்
அமைதிச் சூழல் தவழ்கின்றது
பழைய இலக்கம் பாய்ந்து சென்றால்
அங்கே யுத்தம் நடக்கின்றது
காதல் முனையில் நான்
கனவுகளோடு
கட்டில் மெத்தையில் நீ
கவிகளோடு ....
காற்றுப் போன பலுனுக்கு
ஊதிய அளவு தெரியாது,
கைவிரித்த பெண்ணுக்கு
காதல் வலி புரியாது
கவலையில்லாத ஆடும்
தாடி வெட்ட முடியாது
வலிகள் உணரும் பெண்ணுக்கு
என்றும் தாடி வளராது.
சுற்றும் பூமிபோல் வாழ்க்கை
சுழல்வது தெரியாது
ஆனால் ஒருநாள்
விழுபவன் எழுவான்,
எழுந்தவன் விழுவான்
விழுந்தவன் நான்
எழுவேன் உன் முன்னே ஒருநாள்
விருட்சமான வினோதமாய்.