பூக்கள் சிரிக்கத் தொடங்கின

உன்னிடம் மௌனம் பழகிய பூக்கள்
தோட்டத்தில் மொட்டாய் இதழ் மூடிக் கிடந்தன !
பூப்பறிக்க கூடையுடன் வந்த நான்
ஏமாந்து நின்றேன் !
நீ வந்தாய் மெல்லச் சிரித்தாய்
பூக்கள் சிரிக்கத் தொடங்கின
நான் பறிக்கத் தொடங்கினேன் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-17, 10:02 am)
பார்வை : 77

மேலே