எல்லாவற்றிலும் உண்மை வேண்டும்

எல்லாவற்றிலும் உண்மை வேண்டும்

நானே எனக்கு கேள்வியும் ஆகிறேன் .....
பதிலும் ஆகிறேன் .....

மனம் கேட்கும் கேள்விகளுக்கு
ஆராய்ந்து மூளை பதில் சொல்கிறது

மூளை கேட்கும் கேள்விகளுக்கு
மனசாட்சியோடு மனம் பதில் சொல்கிறது

இதில் கூட்டவோ குறைக்கவோ
ஒளிவு மறைவோ
எதுவும் இருக்காது
உண்மை மாத்திரமே இருக்கும்
நான் எனக்கே உண்மையானவளாக இல்லை என்றால்
இந்த காற்று வெளியிடைக்கும் அதன் அண்டவெளியின் அணுத்துகளுக்கும் எப்படி உண்மையாக முடியும்

உண்மையை உண்மையாகச் சொன்னால் தான்
எனக்கு பிடிக்கும்
நான் எதற்கும் அஞ்சவும் மாட்டேன்
மயங்கவும் மாட்டேன்

இந்த பூசி மெழுகும் வேலையெல்லாம்
என்னிடம் வேலைக்காகாது
எது எப்படியோ அதை அதுவாகவே சொல்ல வேண்டும் ஏற்றி இறக்காமல்

நான் எதையும் புகழவும் மாட்டேன்
இகழவும் மாட்டேன்
அதன் இயல்பு என்னவோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வேன்
அதன் இயல்பை கெடுக்காமல்
அதை அப்படியே சுதந்திரமாக வாழ வழி விடுவேன்

எதையும் தீர ஆராய்ந்து தான் முடிவெடுப்பேன்
யாராக இருந்தாலும் என்ன சொன்னாலும் தலையாட்ட மாட்டேன்
யோசித்தே தீர்வை பெறுவேன்
ஒரு பக்க நியாத்தை மட்டும் கேட்டு முடிவெடுக்க மாட்டேன்
தராசு முள் போல் நடுநிலையில் தான் நிற்பேன்
என் ரத்த சொந்தமாக இருந்தாலும் நட்பாக இருந்தாலும்
ஏன் நானாகவே இருந்தாலும்
தவறென்றால் தவறு தான்
நீதி மட்டுமே வெற்றி பெற வேண்டும் எப்பொழுதும்

சிறியவர் பெரியவர் பேதம் இல்லை
நீதியில்
சிறியவர் பெரியவர் என்பது உருவத்தில் இல்லை
அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது
நடத்தையில் இருக்கிறது
யாராக இருந்தாலும் அவர்களை அலட்சியம் செய்யக் கூடாது
அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்

பூஜ்யத்திற்கு கூட உண்மை அவசியம்
ஆரம்பித்த இடத்திலேயே முடித்தால் தான் பூஜ்யம்
ஆதலால்
உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள்
நீங்கள் வாழும் வாழ்க்கைக்கு உண்மையாக இருங்கள்
இந்த பிரபஞ்சத்திற்கு உண்மையாக இருங்கள்

உயர்வு தாழ்வு
உடையில் இல்லை
புறத்தில் இல்லை
சாதியில் இல்லை
அகத்தில் இருக்கிறது
அதன் எண்ணத்தில் இருக்கிறது

ஓடும் உதிரத்தில் மாறுதல் இல்லை
இந்த மனிதர்கள் மட்டும் ஏன் மாறுவதே இல்லை ...
பெண்மையை தெய்வத்திற்கு ஒப்பாய் சொல்கிறார்கள்
அந்த பெண்மையை ஏன் வன்மம் கொண்டு பார்க்கிறார்கள் ....
நீதி நீதி என்று சொல்கிறார்கள்
அந்த நீதியை
சதியால் வெல்கிறார்கள்
இது தான் உங்கள் நீதியோ ?
நீதி நீதியின் பக்கம் நிற்காதோ !
ஏன் நிற்காது....
எல்லோரும் மனசாட்சிப்படி நடந்துக்கொள்ள வேண்டும்
அதற்கு முதலில் மனம் வேண்டும்
எல்லோரும் நல்லவராக வேண்டும் .....

தலைப்பு :
எல்லாவற்றிலும் உண்மை வேண்டும் .....
நீதி வேண்டும் .....
நியாயம் வேண்டும் .....
கடமை ...கண்ணியம் ...கட்டுப்பாடு வேண்டும் .....
சிறு அணு கூட உண்மையாக வாழ வேண்டும் இந்த உலகில் .....

வாழ்க்கை உண்மையானது .....வாழு உண்மையாக .....
சோகத்தை தூக்கி ஏறி
அடுத்த அடி பலமாக வை
நிலத்தில் அல்ல வானில்
உன்னால் முடியும்
நீ முன்னேறு
பிறரை முன்னேற்று .....
எதுவும் நிரந்தரம் இல்லை
அதனால் நீ நிரந்தரமாக நில்
நீ நீயாக .....
எதைக் கண்டும் பயம் கொள்ளாதே
மனிதனை மதி
தீயதை கேள்வி கேள்
இயற்கையை ரசி அபகரிக்காதே .....
இசையை நேசி
மனம் என்றும் குழந்தையாகட்டும்
அறிவு பெருகட்டும்
ஒவ்வொரு நொடியும் அழகானது அனுபவி
வாழ்க்கையை அது தரும் அனுபவங்களை இயல்பாக வாழ்ந்து பார் .....
வாழ்வதற்கே வாழ்க்கை .....
வீழ்வது எழுவதற்கே .....

உத்வேகமும் மலர்ச்சியும் இருந்து விட்டால்
புது மலராக பூத்துவிடலாம் .....
எந்த பூவும் வாடுகிறோம் என்று வாடி
நாளை பூக்காமல் இருப்பதில்லை
தினம் தினம் புதிதாய் பூக்கிறது
பூவே நீயும்
பூத்துவிடு .....
புத்தம் புதிதாய்
புது வாழ்வு மலரும் .....

புன்னகை பூமியாகட்டும்
பூப்பதும் காய்ப்பதும் நியதி
வளர்வதும் தேய்வதும் நியதி


வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்ந்து தான் பாருங்களேன்
பொய்மையின்றி .....

உண்மை தான் வாழ்க்கை
உண்மை என்பது நம்பிக்கை

இயற்கை எவ்வளவு அழகான
உண்மை தெரியுமா .....

இந்த பூமி நம்மை தாங்கிக்கொண்டிருக்கிறது
இந்த மரம் நமக்கான காற்றை நிழலை தருகிறது
இந்த மண் நமக்கு உணவு தருகிறது
நமக்கு உண்மையாக இருக்கிறது
நாமும் அது போல் அதற்கு உண்மையாக இருக்க வேண்டும் .....

ஏதோ ஒரு நேரத்தில்
எல்லோர் வாழ்க்கையிலும் நிகழும்
பொய்யாக உன்னை கெட்டவர் என்று
உலகிற்கு உன்னை பழிக்கும் சிலர் காட்டினால்
உன் நம்பிக்கைகுரியோருக்கு நீ நல்லவர் என்று தெரிந்தால்
இந்த உலகிற்கே
உன்னை நல்லவராக வெளிக்காட்டிடுவார்
காரணம் நீ உண்மையில் நல்லவன்
எல்லா நேரங்களிலும் உண்மையாக இருந்திருக்கிறாய்
உன் நட்பிற்கு

நட்பு உண்மையானது .....

யாரையும் எதிரியாக நினைத்தது இல்லை
ஆனால் எதிரியாக எதிரில் நின்றால்
எதிர்த்து நிற்பதில் தவறில்லை .....

எதிரி என்பவன் உண்மை
துரோகி என்பது உனக்கு தெரியாது காரணம்
துரோகம்
யாரிடம் எப்படி நடக்க வேண்டும் என்பதும்
நடத்தை என்னும் உண்மை தான் தீர்மானிக்கிறது .....

எனக்கு எதிரியும் இல்லை
துரோகியும் இல்லை
காரணம்
நான் யாரையும் வஞ்சித்ததில்லை
இயற்கையோடு இணைந்து இயல்பாக (உண்மையாக) வாழ்கிறேன் .....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (7-Apr-17, 9:24 am)
பார்வை : 378

மேலே