காதலின் நிறமேதடியோ

அந்தி வானம்
மஞ்சள் கலந்து சிந்திடும் மழைபோல்..
வெட்கம் பூசியே
உன் கண்கள்
மனதிலிடும் கோலத்தின் நிறம் ஏதடியோ?
ஓடை நீர்த்துளி பாறையில் வீழும்போதிலே காற்றினில் பற்றிட கைகள் ஏதடி? சிந்திடுமே! சிதறிடுமே! எந்தன் நிலைபோல்....
வெயிலும் மழையும் கொஞ்சிபேசி சிரித்து வானில் விசிறும் பாணம் காதலெனும் வானவில்லோ?
உன் விரல்கள்
காற்றில் வீசி மனதில் வடித்திடும் வரியின் மொழிகள் ஏதடியோ?
சிற்பம் போல நின்றாய்
சிரித்துபேசி கொன்றாய்
நானும் சிதைந்து போகவே நேரம் தர உனக்கு நினைவில்லையோ?
உனை மீண்டும்
காண வேண்டும்
அதை எந்த தவம் ஈனும்..!
வின்வெளி உண்டு சிறகுமுண்டு சிறைக்கு பின்னே!
வாழ்ந்து பார்க்க வேண்டும்
உந்தன் வாசலின் திசை ஏதடியோ?

எழுதியவர் : சுரேஷ்குமார் (10-Apr-17, 1:05 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 91

மேலே