புன்னகையில் நீ ஒரு தேவதை

நிசியில் கொடியில் அரிதாய்ப்
பூத்திடும் பிரம்ம கமலமோ நீ !
தண்ணீரில் தண்டில் அழகாய்
பகலில் விரியும் தாமரையோ நீ !
இரவின் அழகில் நிலவின்
பொழிவில் மலரும் அல்லியோ நீ !
யார் நீ என்றேன் சிரித்தாள் !
பூவினங்களில் நீ ஒரு தாமரை
புன்னகையில் நீ ஒரு தேவதை
என்றேன் !
வெட்கத்தை சற்று விலக்கி வைத்துவிட்டு
அருகில் வந்து அமர்ந்தாள் !

----கவின் சாரலன்

மேலே படம் : பிரம்ம கமலம்
ஆண்டிற்கு ஒருமுறை நள்ளிரவில் மட்டும் பூக்கும் அபூர்வ மலர் .
இதன் மென்மையான மணம் மனதை ஈர்க்கும் .
விதையோ தண்டோ தேவையில்லை தன் இலையிலிருந்தே பிறப்பெடுக்கும் வித்தியாசமான மலர் !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Apr-17, 9:16 am)
பார்வை : 103

மேலே