மெல்ல சிரித்தது பூக்கள்

சின்ன சின்ன
மழைதுளி என்மேல் விழுந்ததடி
உன் நினைவுகளேல்லாம்
அதிலே நனைந்ததடி...

சின்ன சின்ன
விழிதுளி என் முகத்தில்
விழுந்ததடி அது
என் கன்னங்களில் காதல்
கோலம் வரைந்ததடி...

மொட்டுக்களும்
ஒரு நாள் மலரும்
சின்ன திட்டுக்களும்
ஒரு நாள் கரையும்
உன் நினைவுகள் என்னுள் கலையாதடி...

கார்கால மேகங்கள் காற்றோடு
கரைந்தாலும் உன் நினைவுகள்
என்றும் கரையாதடி
பூ பூத்த சோலைகள் புயலடித்து
சாய்ந்தாலும் உன் மேல் நான்
கொண்ட காதல் சாயாதடி...

நான் விழிமூடும் நேரத்திலும்
என் நினைவில் உன் முகம் மலருமடி
நீ விழிமூடிடும் நேரத்திலும் என்
நினைவுகள் உன் மடி சாயுமடி...

எழுதியவர் : செல்வமுத்து.M (10-Apr-17, 9:11 am)
பார்வை : 105

மேலே