மெளனம் பேசிய காதல்

அழுத வானத்தின் கன்னங்கள்
செக்கச்சிவக்கும் தருணத்தில்...

பரிதியும் வெட்கத்தில் சாகரத்தினுள்
சென்று ஔியும் தருணத்தில்...

அண்ணன் தன் தங்கைக்குப்
பிறந்தநாள் பரிசாக
மணல்வீட்டை அளிக்கும் தருணத்தில்...

அலைகள் துள்ளியெழுந்து
கரையினில் அடங்கும்
தருணத்தில்...

சாலைக்குக் குடையாய்..
நமக்காக சுவாசிக்கும் மரங்களினில்
பறவைகள் கீதமிசைக்கும்
தருணத்தில்...

இலைகளின் நுனியில் அமர்ந்த
மழைத்துளிகள் சாெட்டும்
தருணத்தில்...

குழந்தைகள் ஊதுபைகளைக்
காற்றுக்குத் தியாகம் செய்யும்
தருணத்தில்...

நடைபழகும் பிள்ளையைப் பெற்றாேர் கைப்பிடித்து வழிநடத்தும் தருணத்தில்...

நனைந்த மழையின் குளிராேடு
வழிப்பாேக்கன் வெப்பமான
தேநீரைத் தேனாய் ஊதிச்சுவைக்கும்
தருணத்தில்...

காதலர்கள் ஊடலாேடு கூடும்
தருணத்தில்...

வெண்மை நிற மகிழுந்தில் மென்மையான நீ.. பறந்து வர..
அதை நான் வழிமறிக்க..
காென்றை மலர்கள் விரித்த
மலர் பாதையில் உன்
மலர் பாதம் தழுவ..
கருமை நிற ஆடையில் தேஜசாய் நீ ஜாெலிக்க...

பட்டாம்பூச்சிகள் உனை மாெய்க்கும்
தருணத்தில்...

குளிர் தென்றலுக்கு உன் கார்குழலும் நடனமாடும் தருணத்தில்...

கண்காெட்டி எனைப் பார்த்து என்ன என கண்களால் வினவ..
கண்காெட்டாது உனைப் பார்த்து
எனது கரத்தை உன்னிடம் நீட்டி..

என் காதல் ஜ்வாலையை
உன்னுள் ஏற்ற
ஏற்ற அன்பளிப்பு..
இயற்கையின் நிகழ்வுகளை உனக்காகக் காெணர்ந்தேன்
எனக் கூற..

நீ ஒவ்வாென்றாய் உள்வாங்கினாய்..

செக்கச்சிவக்கும் வானத்தின் கன்னங்களும்...
வெட்கும் பரிதியும்...
மணல் வீடும்...
அடங்கும் அலைகளும்...
கீதமிசைக்கும் பறவைகளும்...
சாெட்டும் மழைத்துளிகளும்...
காற்றுக்கான தியாகமும்...
பெற்றாேரின் அறவணைப்பில் பிள்ளையும்...
தேநீர் தேனானதும்...
காதலரின் ஊடலும் கூடலும்...
பட்டாம்பூச்சிகள் உனை மாெய்த்தலும்...
உன் கார்குழலின் நடனமும்...

உனை நானும் உள்வாங்கினேன்.

அத்துனையையும் நீ ரசிக்க...
உனை நானும் பார்த்து ரசிக்க...

அத்துனையையும் நீ பிரமிக்க...
உனை நானும் பார்த்து பிரமிக்க...
சில நிமிடங்கள்.... மெளனம்.

நாம் இருவரும் காதலாேடு
இணைந்தால் இயற்கை இன்னும்
அழகாகும் என நான் கூற..

பேசா மடந்தையாய் நீண்ட நேரம்
நீ நிற்க...
இம்முறையும் தாேல்வி தழுவியதென
என் சிரம் கீழே கவிழ...
என் விழியிலிருந்து கண்ணீர் ததும்பும் தருணத்தில்..
உன் இதயம் திறந்து
இதழ் திறவா புன்னகையுடன்..
உதயமான காதலுடன்..
என் கரத்தாேடு உன் கரம் சேர..

கவிழ்ந்த என் சிரம் உனை நாேக்க...
வழிந்த கண்ணீராேடு
என் இதமான இதயத்தையும் ஆனந்தமாய் உன்னிடத்தில்
சரணடைத்துவிட...
அப்பாேதும் பேசாமடந்தையாய்
நீ நிற்க...
மெளனம் காதல் பேசியது !

எழுதியவர் : சரண்யா சுப்பிரமணியன் (15-Apr-17, 11:03 pm)
பார்வை : 326

மேலே