கிராமம் செல்
![](https://eluthu.com/images/loading.gif)
மண்வாசனை கல்வியுடன் வேண்டுமா ?
கிராமம் செல்
அர்ப்பணிப்புள்ள ஆசான்கள் வேண்டுமா ?
கிராமம் செல்
அழுதிடும் மாற்றான் குழந்தையின் பசி மட்டும் உணர்ந்து பசியாற்றத் தவித்திடும் தாய்மையைக் காணவேண்டுமா ?
கிராமம் செல்
ராக தாளம் அறியா ....
இயற்கையின் இசை மேதைகளை காணவேண்டுமா ?
கிராமம் செல்
ஏழ்மையிலும் செம்மை காக்கும் மாந்தர் தமைக் காண வேண்டுமா ?
கிராமம் செல்..
நகரவாழ்க்கை நரக வாழ்கை என்று புரிய வேண்டுமா ?
கிராமம் செல்.