காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
உள்ளத்தில் உன் காதல் வெள்ளமென பாய்ந்ததடி..
மெல்லவே உன்னிடம் சொல்லிவிட ஓய்ந்ததடி..
மௌனமே பதிலாய் இன்றுவரை உன்னிடம்.
நான் மரணத்தை தாங்கி மடியவா மண்ணிடம்.
உறக்கமில்லா இரவுகள்..
உனைச்சுற்றியே கனவுகள்.
இரக்கமில்லா உனைபிரிந்தால்
இறக்க இதயம் சொல்லுதடி..
மறக்கவும் முடியவில்லை
மரணம் நாளும் கொல்லுதடி..
நீசொல்லிடும் ஒற்றை வார்த்தைக்கு
என் கல்லரை வரையிலும் காத்திருப்பேன்..