நீதானம்மா உலகஅழகி
ஒடுங்கிய கண்கள்
குழி விழுந்த கன்னம்
சுருங்கிய தோல்
பொக்கை வாய்
நடுங்கும் விரல்கள்
ஒட்டிய வயிறு
தடுமாறும் நடை
உள்ளத்தில் அன்பு
உயர்ந்த எண்ணம்
எளிய வாழ்க்கை
முதுமையிலும் உழைப்பு
வாய் கொள்ளா சிரிப்பு
என்னைப் பொறுத்தவரை
நீதானம்மா உலகஅழகி