நிலவு
உன் வரவைக் கண்டு வெட்கத்தில்
சூரியன் மறைந்து விடுகிறது..,
உன் வெளிச்சத்தில் மயங்கி
விண்மீன் ஒளிவீச துடிக்கிறது..,
உன் அழகிய தோற்றத்தால்
இரவு செல்லவே மறுக்கின்றது..,
உன்னை எதை வைத்து
செதுக்கினாரோ ..,
உன் மேன்மையை எதில் எடுத்துக்
கொடுத்தாரோ..,
உன்னை சிறிது தொடக் கூடாதோ
பேரழகே..,