மோக நிலை

முத்துமழை பொழிகின்ற
முல்லை வன சோலையிலே
முழு, செவ்விதழ் மோகநிலா
முன் நிற்க தோன்றுதடி
முத்த மழை வருமோ! விழியிதழ்
முதற் பார்வையில் நான்...

மூடி வைத்த மேக மழை
மூச்சு விட ஏங்குதடி
மூன்று மொழி வார்த்தை அது
மூளை வரை கேட்டுதடி...

மொட்டு விட்ட மல்லிகையின்
மொத்த வாசம் வீசும்போல்
மொழி தெரியா பேரழகி - மேனி
மொய்க்கும் மோகன் யாரவனோ.,

மோதல் கண்ட காதல் மனதில்
மோகப் பார்வை வீசுவதேன்
மோனம் கொண்ட பெண்மை அவள்
மோகன் விழி கண்டதுவே - இனி
மோதனமே சிந்திடுமே...

எழுதியவர் : கலைவாணன் (18-Apr-17, 11:37 am)
சேர்த்தது : கலைவாணன்
Tanglish : moga nilai
பார்வை : 167

மேலே