இக்கால ஜாடி - பாப்பா பாடல்- திருத்திய மீள்பதிவு
![](https://eluthu.com/images/loading.gif)
................................................................................................................................................................
தாகம் கொண்ட காகம் ரெண்டு
தண்ணீர் தேடி அலைந்ததாம்..
போகும் வழியில் ஜாடியொன்றில் .
கொஞ்சம் தண்ணீர் கண்டதாம்..
பள்ளிப் படிப்பு காகமொன்று
கற்கள் தூக்கிப் போட்டதாம்..
பட்டறிவுக் காகம் நின்று
பள்ள மொன்று பறித்ததாம்..
கல்லைத் தூக்கி தூக்கி இட
தண்ணீர் மேலே வந்ததாம்..
கல்லின் கனம் தாங்காமல்
ஜாடி விரிசல் கண்டதாம்..!
ஓடிய நீர் பள்ளத்தில்
ஒழுகி ஒழுகி நின்றதாம்..
ஏடறியாக் காகத்தின்
எண்ணவோட்டம் வென்றதாம்..
இருபறவை சேர்ந்தங்கு
இருந்த நீரைக் குடித்ததாம்..! !
அனுபவத்து அறிவாலே
அல்லல் நீங்கும் என்றதாம்..!