முயற்சிக்கு முடிவேது

இடைவிடா முயற்சி
கொடுக்கும் பெரும்பயிற்சி
விலக்கிடுவோம் அயர்ச்சி
பெற்றிடுவோம் தேர்ச்சி

இதயத்தில் ஒன்றுநினைத்தால்
வெற்றிவரை போராடு
உதயம் நமக்காயாகும்
என்றேநினைத்து செயல்படு

ஓட முடிவெடுத்தபின்னே
ஓய்வுக்கெல்லாம் இடமில்லை
தாண்டநினைத்தபின்னே வெற்றியைத்
எட்டுவ‌தைத்தவிர வழியில்லை

விடாதுதுரத்துவோம் வெற்றியை
அதுமயங்கிடட்டும் நம்காலடியில்
விட்டுவிட்டால் ஒருபட்டமாய்மாறி
பறந்துவிடும் வெகுதூரத்திற்கு

முயற்சியில் இறங்குவோருக்கு
எவரெஸ்டும் சிறுகுன்றே
தீராத வேட்கைக்கொண்டால்
பலமேடைகள் நமக்கென்றே..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Apr-17, 11:13 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 148

மேலே