இதழால் குத்தி இதயத்தைக் கிழிக்காதே

மௌனம் மட்டும் கொடு
வாய் திறவாதே..
உன் வாயுதிர்க்கும் வார்த்தை
விடத்திலும் தீதே..
பிடித்த வரைக்கும் இருந்தாய்
தேனிலும் இனிப்பாய்..
மறுக்கும் பொழுதில் தெரிந்தாய்
தேளிலும் வெறுப்பாய்..
உன்னிடம் மயங்கியது தவறுதான்
தோற்றது இதயம்..
என்னைத்தான் தேற்றிட யாருண்டு
கொல்லுது தினஉதயம்..