நிலவில்லா வானம்
![](https://eluthu.com/images/loading.gif)
நிலவில்லா வானம் நீயின்றி நானும்
உலாபோகா காற்று என்கண்ணில் நீரூற்று
பலநாளாய் சோகம் வாடிப்போய் தேகம்
சிலநேரம் தூக்கம் பலநேரம் துக்கம்
அன்பாய்தான் இருந்தாய் எனக்களித்தாய் கவிவிருந்தாய்
ஆசையும் கொண்டிருந்தாய் இதயத்தை ஆண்டிருந்தாய்
பட்டமாக பறந்தேன் திட்டமேதோ செய்தாய்
நூலை அறுத்திட்டாய் கீழே விழுந்திட்டேன்
வெளிக்காயம் வலிக்கவில்லை மனக்காயம் ஆறவில்லை
வெளியேதான் புன்சிரிப்பு உள்ளத்துக்குள் பெரும்புண்ணிருக்கு
பலியுன்னைச் சொல்லவில்லை என்மேலே தான்குற்றம்
விழுந்தேனுன் காதல்பாதம் எழவில்லை என்றுமுற்றும்
மருந்தில்லா காதல்வலி பெருந்துயரம் அனைவருக்கும்
வருமானம் ஏதுமில்லை அவமானம் தினமுமுண்டு
பெற்றெதெல்லாம் அன்புதானே குற்றமென்ன செய்துவிட்டேன்
வற்றும்நதியாய் வாழ்க்கையாச்சு மூச்சுமட்டும் வந்துபோச்சு
பௌர்ணமியே வந்துவிடு காதல்மீண்டும் தந்துவிடு
வெண்ணிலவே உதித்துவிடு என்னிதயத்தில் பந்தியிடு
கொட்டட்டும் பெருமழையே பூக்கட்டும் பூங்காடு
ஓடட்டும் சோகத்துளி போதுமடி என்பாடு