மரம் எங்கும் நடுவோம் ----

மண்ணெல்லாம் குளிர,
மழையெங்கும் பெய்ய வேண்டும்,
மனதார வேண்டுகிறேன்.
பசிக்கும் உடலுக்கு,
புசிக்கும் உணவே வலு சேர்க்கும்.
செடி, கொடிகளுக்கு,
பாய்ச்சும் நீரும், பெய்யும் மழையுமே உரமாகும்.
மண்ணெல்லாம் குளிர,
மழையெங்கும் பெய்ய வேண்டும்,
மனதார வேண்டுகிறேன்.
மனிதனின் பேராசை,
கை நிறைய காசு பார்க்கவே,
பயிர் விளையும் நிலத்தையும்,
நிழல் தரும் மரத்தையும்,
மாற்றி விட்டான், மறந்து விட்டான்.
மண்ணெல்லாம் குளிர,
மழையெங்கும் பெய்ய வேண்டும்,
மனதார வேண்டுகிறேன்.
கண் காணுமிடமெல்லாம் பசுமை,
கால் படுமிடமெல்லாம் நிழல் என்று மாற,
கருத்தில் வைத்தால், காலம் மாறும்,
எண்ணிச் செய்திடல் வேண்டும்.
உண்மை உணர்ந்திடல் வேண்டும்.
மண்ணெல்லாம் குளிர,
மழையெங்கும் பெய்ய வேண்டும்,
மனதார வேண்டுகிறேன்.
விளை நிலம் திருத்துவோம்,
மரம் எங்கும் நடுவோம்,
மனம் நிறைந்து செய்வோம்,
மாற்றங்கள் நடந்திடும்.