கவிதையே உனக்கொரு கவிதை

கவிதையே உனக்கொரு கவிதை...
விடியாத இரவு தனில்
வடிகாலாய் நீ இருந்தாய்!
தேற்றாத சோகமதில்
ஊற்றாக நீ வழிந்தாய்!
பசியதன் மயக்கத்தில்
புசிக்க நீ நூலானாய்!
துன்பத்தின் ரேகை தனில்
இன்ப இழையாய் ஊடிட்டாய்!
மனக்கல்லை செதுக்கியதில்
நுணுக்கமிகு சிற்பியானாய்!
பிரிவுதன் பிதற்றமதில்
உறவுற்று உயிரானாய்!
முக்கனியை மதுரமதில்
ஊறவைத்த சுவை தந்தாய்!
கவிஞர்களை வாழ வைக்க
எக்காலும் வாழ்வாய் நீ!..........
சு.உமாதேவி