ஏய் ஹிந்தி கார தமிழச்சி

என் கற்பனைக்குள் கார்கில் நடத்தி
கணம் கணம் காதல் குண்டு வீசி
என்னை வீழ்தியவளே, கேள்.

புதிப்பித்த ரெண்டு விண்மீன்கல் உன்கண்கள்
என கண்டுகொண்டேன்.

வான சிவப்புகள் நீ சிரித்தபின்
வந்ததென கண்டுகொண்டேன்.

உன் மூக்குத்தி முத்தமிட்டு
முதுகுத்தண்டில் மின்சாரம் கண்டுகொண்டேன்.

உன்னிடம் காதலை மும்மொழிந்த பின் தான்
கருமம் இந்த ஜாதியையும் கண்டுகொண்டேன்.

எனினும் காற்றின் நடுவே கடந்து போன நம்
காதலை பற்றிக்கொண்டேன்.

இது பார் , ஓளிவேகம் தொலைந்ததடி
உன்விழிவேகம் பார்த்ததினால்

Albert Einstein பார்த்திருந்தால்
அன்றே தோற்றிருப்பான்.

Relativity யை விட்டுவிட்டு
Relationship theory எழுதி இருப்பான்.

Einstein போனால் என்ன
இந்த அரவிந்த்ரெனால்ட் எழுதுகிறேன்.

ஏய் ஹிந்தி கார தமிழச்சி
இனிமேல் நான் சுவாசிப்பது உன்மூச்சி.

என் நுரைஈரலும் ஏற்றுக்கொண்டது
இதயம் உன்னை மட்டும்வைத்து பூட்டிக்கொண்டது

நீ வாய்திறந்து சொல் வானம் தாண்டிபோய் வாழலாம்.
புதுஉலகு,
இது வரை புவியில் இல்லாத உறவு,
நாம்படைப்போம்.
படைத்து,கடவுளுக்கே பாடம் கற்பிப்போம்.
என்ன சொல்கிறாய்???.

எழுதியவர் : அரவிந்த் ரெனால்டு (24-Apr-17, 4:06 pm)
சேர்த்தது : ரெனால்ட்அரவிந்த்
பார்வை : 122

மேலே