சிறு உருவம்

தகப்பனின் சிறு உருவம்
தாயின் மறு உருவம்
உன் அரவணைப்பிற்கு ஏங்கி
அடித்து விளையாடும்
குட்டி குரங்கு
நீ சேர்த்து வைக்கும் பணத்தை
திருட பிறந்த திருடன்
நீ எடுத்து கொடுக்கும் பேனை
குத்தி கொலை செய்யும் கொலைகாரன்
ஒட்டு மொத்தத்தில்
உன்னைப் போல் அக்காவிற்கு பிறந்த
என்னைப் போல் தம்பி
- பே.ருத்வின் பித்தன்