என் மேல் கோபமா காதலியே
கோபத்தில் கூட
நீ என்னை
பார்த்தால்
காதல் தான் !
நான் உன்னைத்தான்
காதலித்தேன்
கோபத்தை அல்ல..
நிழலை பார்க்கவில்லை
நிஜம் தேடும்
கண்களில் நீயே!
காதலை சொல்ல
கனல் ஆனாய்..
அந்த கனலில்
நான் காத்திருக்க
உன் கோபத்துளி
என் மேல் வீச
காதல்துளியாய்
உன் மேல் நான்..
என்னை பிடிக்கவில்லை
என உன் கண்கள்
சொன்னாலும்
உன் இதயத்தில்
சுவசமாய் நான்
புகுந்தேன்..
கனல் கரைந்து
மணல் ஓவியம்
வரைய வந்த
உன் வருகை
கடல் மண்ணுக்கு
மரியாதை!
காதலித்த எனக்கு
உன் அலையில்
நித்தம் நனையும்
நீங்காத நினைவுகள்
நம் வாழ்நாள்
உள்ளவரை..
என் கண்ணீர்
துளி கடலில்
கலந்து
நம் காதலை
அலையாய் வீசி
வாழ்த்து சொல்லும்
உன் கண்ணிலும்
நீர் துளி கோபம்
காதலானது..