தமிழ் எனது தந்தை மொழி

அன்னைத் தமிழே நான் தொழும் அன்பு தெய்வம் என்பார் எம் தந்தை...
அவ்வாறு சொல்வதோடு நின்றுவிடாது அதையே நித்தமும் வணங்கி, எம்மையும் வணங்குமாறு வலியுறுத்துவார் எம் தந்தை...

வார்த்தைகளின் தன்மையை யாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் நேரம், தமிழின் ஒவ்வொரு எழுத்தையும் ஆராய்ந்து அதன் தன்மையும், சக்தியையும் எடுத்துரைப்பார் எம் தந்தை...

என்ன இது? இவ்வளவு புதைந்துள்ளதா? நம் அழகுத்தமிழில் என்றே வியப்புக்குறிக்குள் அகப்பட்டவனாய் நானும் கேட்டிருப்பேன் ஆர்வமாய் அவருரைக்கும் அர்த்தங்களை....

தமிழில் அவர் புலமை பெற்றவர் அல்ல,
பட்டங்கள் பெற்றவர் அல்ல, என்றாலும் அவர் எடுத்துரைக்கும் அவ்விளக்கங்களை கேட்டு யான் கற்கிறேன் அனுதினமும்...

எழுதும் போது ஆயிரம் எழுத்துப்பிழைகளுடன் அவர் எழுதினாலும், எனக்கு அழகுத் தமிழ் வித்தையை அள்ளித் தந்ததில் அவரே எனது ஆசானும் ஆவார்...

எம் தந்தையின் தேடலே இந்த தனயனின் தேடலானதால்,
நானென்பவன் இந்த உலகில் புரியாத புதிரானேன் சுற்றத்தின் மத்தியிலே...

இவ்வுலக வாழ்வினைத் தந்து, அதைக் கடப்பதற்குத் துணையாய் நல்லறிவையும் விதைத்த எனதன்பு தந்தைக்கு நன்றி கூறி பணிகிறேன், நல்லதொரு சீடனாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-Apr-17, 6:06 pm)
பார்வை : 1083

மேலே