முதற்காதல் மாற்றங்கள் ---முஹம்மத் ஸர்பான்

என்னவள்
கருமைக்
கூந்தலில்
உதிர்ந்த
மல்லிகை
மலர்கள்
வானோடு
உறங்கும்
தாரகைகள்

உந்தன்
கன்னக்
குழியில்
தடுக்கி
விழுந்த
என்னை
கனவும்
கானலும்
புயலாய்
ஆள்கிறது

உலகில்
உன்னை
கண்ட
பின் தான்
இறைவன்
இதயம்
தந்ததன்
நோக்கம்
அறிந்தேன்

அவளது
விழிகள்
என்னை
சுட்டுக்
கொன்று
மறு நொடி
அவளது
புன்னகை
என்னை
பாடை
சுமந்து
போகிறது

மங்கை
தேகம்
எனும்
உலகில்
கவிஞன்
இதயம்
எனும்
ஆலயம்
இருவர்
மூச்சின்
கவிதை
அன்பின்
காதல்
வேதம்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (28-Apr-17, 7:12 pm)
பார்வை : 127

மேலே