கூமுட்டைகள்

#கூமுட்டைகள்

கூடை வியாபாரம்
குறைந்த விலை பேரம்
எடை தாழ்ந்த பழங்கள்
பேரத்தில் வென்ற பூரிப்பு..!
எடை தட்டின் சங்கிலி
குறைக்கப்பட்டோ
பொருள் தட்டின் சங்கிலி
நீட்டப்பட்டோ இருப்பதை
யார்தான் கண்டிருக்கிறார்கள்..?
யார்தான் அளந்திருக்கிறார்கள்..?

தள்ளுபடி விற்பனை
ஊடக விளம்பரங்கள்
புடவைகளும் ஆடைகளும்
குறைந்த விலையில்
குறைந்தேதான் போகிறது
நீள அகலங்கள் தள்ளுபடியில்..!

கூலியில்லாமல்
தங்க ஆபரணங்கள்
ஆசை காட்டி மோசடி வியாபாரம்
சேதாரத்தின் மீது தாராளமாய்
வீத உயர்தல்கள் மறைமுகமாய்
கொட்டியிருப்பார் சேதாரமாய்
கூலிக்கு ஆசைப்பட்டு..!

ஐந்தாண்டு கொள்ளையருக்காய்
ஐநூறு கொள்ளையடிக்கும்
அற்ப கொள்ளையர்கள்
கூமுட்டைகளின் உச்சமாய்..!

நாட்டில் இருக்கப்போவதில்லை
இனி எதுவும் மிச்சமாய்
சுடுகாடும் கிட்டாது இனி..!

யதார்த்த வாழ்வில்
நித்தமும் ஏமாறுபவர்கள்
ஒருவரும் கூறிக்கொள்வதில்லை
தங்களை கூமுட்டைகள் என்று..!

-சொ. சாந்தி-

எழுதியவர் : சொ.சாந்தி (28-Apr-17, 10:41 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 115

மேலே