மனிதா நீயே திரை - நாகூர் லத்தீப்
உலகத்தில்
நீ தோன்றினாய்
என்று மறைவு
உனக்கு தெரியுமா....!!
ஆணவம்
கொள்கிறான்
எல்லாம் எனது
என்கிறான்
நிலையற்ற
வாழ்வை மறந்து...!!
இறை
மறை
மனிதா நீயே திரை...!!
உண்மை
உனது முன்னே
சிரிக்கிறது - நீ
அறியாமல்
இருப்பதாலே...!!
நீ
நடக்கும்
பாதை நீ
அறிவாயா
எங்கு
செல்கிறோம் என....!!
முடிவை நீ
அறிந்தால்
காலத்தை
நினைத்தது
வருந்துவாய்
எதனாலே என்று....!!
இறப்பதற்கு
முன் நீ இறந்து
பழகிவிடு
பிறகு எது
இறப்பு - பிறப்பு
உனக்கு புரியும்...!!
புரியாத
விடுகதை
மனித
வாழ்க்கையின்
தொடர்கதை
உலகத்தில்...!!