அவிக்கா

ஏண்டியம்மா இம்புட்டு அழகா இருக்கறயே, உம் பேரு என்னடி?
😊😊😊😊😊😊😊😊
எம் பேரு அவிக்கா பாட்டிம்மா.
😊😊😊😊😊😊😊😊
என்னடி சொல்லற? உங்குளுக்கெல்லாம் யாருடி இந்த மாதிரி அவிக்கா அவிக்காதகா -ன்னெல்லாம் பேரு வச்சது. அந்தப் பேருக்கு என்னடிம்மா அர்த்தம்?
😊😊😊😊😊😊
எங்க குடும்ப சோதிடரும், குடும்ப எண்கணித சோதிடரும் ஒரு வாரம் கலந்து ஆலோசனை பண்ணி என்னோட ராசிக்கும் நட்சத்திரத்துக்கும் பொருந்தற மாதிரி 'அவிக்கா' -ன்னு பேரு வச்சாங்களாம். இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு அவுங்களுக்கு தெரியாதாம்; எங்க அம்மா அப்பாவுக்கும் தெரியாதாம்.
😊😊😊😊😊😊😊😊
என்ன அநியாயண்டி அவிக்கா. தமிழ்ல பேருக்கு பஞ்சம் வந்து தொலைச்சிருச்சே. இந்திக்காரங்கெல்லாம் நம்பள ரொம்ப கேவலமா நெனப்பாங்கடி. இதச் சொல்லறதுக்கே எனக்கு வெக்கமா இருக்குதடி அவிக்கா.
😊😊😊😊😊😊
நாம தனிச்சு நின்னு ஒண்ணும் செய்ய முடியாதுங்க பாட்டிம்மா. தமிழ வளர்க்கவேண்டிவங்களே இந்திப் பெயர் மோகத்தில இருக்கறபோது நாம ஊரோட ஒத்துப்போறதுதானே நாகரீகம்.
😊😊😊😊😊😊
நல்ல நாகரீகம்டி. ரொம்ப நல்லா இருக்குது.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Avika = diamond

எழுதியவர் : மலர் (2-May-17, 1:19 am)
பார்வை : 131
மேலே