தொட்டவன் எவனோ ஒருவன்
மலை வழி நடந்தனர் பலர்
பாதி வழியில் திரும்பினர் சிலர்
அதன் பின்னும் நடந்து திரும்பினர் சிலர்
அப்பாலும் நடந்து திரும்பினர் சிலர்
மலை உச்சியைத் தொட்டவன் எவனோ ஒருவன் !
திரும்பியவர்கள் எல்லாம் மலை ஏறியவர்கள் இல்லையா ?
மலையேறியவர்கள்தான் !
மலை உச்சியைத் தொட்டவன் வென்றவன் !
-----கவின் சாரலன்

