நிச்சயமிலா ஆச்சரியக்குறி
********************************************
மீசை முளைக்காமலே
ஆசை துளிர்விடுகிறது ..
பருவத்தைத் தொடாமலே
உருவாகிறது காதல் ...
காலத்தின் கோலமா
கோளத்தின் கோளாறா ...
தலைமுறை மாற்றமா
வழிமுறையில் தவறா ...
விஞஞானம் வளர்ச்சியா
நாகரீகம் தளரச்சியா ...
வாழ்வியலில் குறையா
வாழும்முறை குற்றமா ...
சிந்தையின் தடுமாற்றம்
சிந்தனை வழிமாற்றம் ..
சீர்குலையும் ஒழுக்கம்
சீர்கேட்டின் துவக்கம் ...
வளர்வோரின் வருங்காலம்
வளைந்திட்டக் கேள்விக்குறி ...???
நிமிர்ந்திடுமா எதிர்காலம்
நிச்சயமிலா ஆச்சரியக்குறி ....!!!!
பழனி குமார்
03.05.2017
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
