தரணி போற்றும் தாயகம்
சுயநலத்தை கை கழுவி
பொதுநலத்தை கரம் பிடித்து
நல்லாட்சியை மலரச் செய்தால்.....
லஞ்ச லாவண்யத்தை வேரறுத்து
ஜீவ காருண்யத்தை விதைத்தால்.....
ஜாதி எனும் இரத்த புற்றை
இறுதி செல்வரை சுட்டெரித்தால்.....
மனைவியன்றி மாதர்களை
சகோதர கண்ணுற்றால்.....
கல்விப் பயணத்தை
பணத்தை பணயமாக்காமல்
நேர்வழியில் தொடர்ந் தால்......
தேசத் தியாகிகளின், தேசத்தின்
நேசக் கனவுகளை நனவாக்கினால்.....
நமது தாய்திரு நாடு
தரணி போற்றும் உச்சத்தை நிச்சயம் எட்டும்!!