மனம் அமைதிபெறுவது சேவையால்
உறவுகள் உடைந்து சிதறும் கண்ணாடிகள்...
உடனே ஒட்டி வைத்துப் பார்த்தாலும்
விரிசல் வழியே சோகங்கள் வழியும்
விருப்பம் இல்லாது மனங்கள் இணையும்......
இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை
இதயத்தை வாட்டும் சோகமும் அதிலே...
தொட்டதும் மலரும் நட்பெனும் பூவுதான்
நெஞ்சத்தில் வஞ்சமுடன் சிலவுறகளும் வாழ்கிறது......
இறைவன் பாதத்தில் துயரத்தை வைத்திட
இடைவிடாது மனம் தினம் சிந்திக்கிறது
நம்பிக்கை இல்லாது செய்யும் செயல்களில்
எங்ஙனம் கிடைக்கும் மனதின் அமைதி......
நோயில் துன்பப்படும் ஒருவனுக்கு உதவுவதில்
உள்ளத்தின் மொழியால் அவன் சொல்லும்
ஒருசில வரிகளில் இதயம் குளிர்ந்து
இல்லாத அமைதி யொன்றுக் கிடைக்கும்......
யாரென்று அறியாதவர்க்கு சேவைகள் செய்வதில்
மனதிற்கு கிடைக்கும் வரமாய் அமைதி
நிரந்தர அமைதி அங்கிருந்தே கிடைக்கிறது
நிம்மதியெனும் பெரும்மூச்சும் மனிதனை அடைகிறது......
...கவியரங்க கவிதை...