காதல் வானிலே -- நான் பேச நினைப்பதெல்லாம்

காதல் வானிலே -- நான் பேச நினைப்பதெல்லாம்


காதல் கனியே கவிதை மலரே .
மோதல் இனியே முற்றிலும் வேண்டா .
மலரே உனையே மணமுடை மலராய்ப்
பலநாள் உணர்வாய்ப் பசுமை நெஞ்சில்
இனிதாய் எழுதிட இயற்கை என்னுள்
கனிநிகர் அழகுக் கன்னி நீயும்
சிலையாய் நின்றுச் சிந்தைச் சிதைத்தாய் .
கலைகள் பலவும் கற்றவள் நீயே .
என்றும் உந்தன் நினைவினில் யானும்
உன்றன் பெயரை உள்ளம் எழுதி
இதயக் கூட்டில் இருத்தி வைத்துக்
கதியே நீயெனக் காதல் மலர
விதியை எண்ணி வியக்கும் வேளைப்
பதியாய் எனையும் பதிப்பாய் மனதில் .


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-May-17, 10:12 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 67

மேலே