குரு
நானே ஓர்
மூங்கிலில் செய்த
குழல் வாங்கிவந்தேன்
ஊதிப் பார்த்தேன்
வெறும் காத்து தான்
வந்தது
இப்போது ஒரு
குழல் இசை கலைஞரை
நாடி சென்றேன்
அவர் பாதத்தில்
வீழ்ந்து அவரை
குருவாய் ஏற்றேன்
குழல் ஊத
அவர் தந்த பிச்சையில்
இசை வேள்வியை மாற
நானும் இசை ஞானம் பெற்றேன்
இப்போது நான்
வேய் குழலை ஊதினால்
மக்கள் கூறுகிறார் அந்த
நாகமே படம் எடுத்து
ஆடும் என்று
இதுவும் குரு எனக்கு
போட்ட சிறு பிச்சையே
வாழ்விலும் ஞானம் பெற
நல்ல ஆசான் தேவை
அவரை தேடி அலைந்து
பெற்றிடல் வேண்டும்
அவர் போதனையில்
நாம் இசைந்தால்
நம்முள் ஞானம் வரும்
ஆணவம் போய்
அடக்கம் வரும்
குருவே சரணம்
குருவே தெய்வம்
குருவே சரணம்