என்னை பாரடி ஏன் இன்னும் மௌனம்

கண்ணே கனியமுதே கார்குழலே பூந்தளிரே
பெண்ணே தாமரையே பேரின்பத் தேன்பொழிவே
மின்னும் பொன்போன்ற மேனிநிறம் கொண்டவளே
மின்னல் கொடியாலே எண்ணம் சிதைத்தவளே
அன்ன இனத்தவரில் அசைவில் ஜெயிப்பவளே
இன்னும் ஏனடி உனக்கோர் மௌனம்
என்னைப் பாரடி இதுவே தருணம்
ஆக்கம்
அஷ்ரப் அலி