துரத்தும் நினைவுகள்

கவி எழுத கற்பனையில் நீ..!
துயில் கலைய சொப்பனத்தில் நீ..!

உறங்கா இரவுகளிலும் தயங்காமல் வந்துவிடுகிறாய்..!
கிறங்கா இதயமதுவும் நொறுங்கித்தான் போகிறது..!

இசையோடும் இம்சிக்கிறாய்..!
வசைபாடியும் வலிக்கிறதெனக்கு..!

வார்த்தைகளும் வாய்விட்டு சிரிக்க
வான் நிலவும் வாளெறிந்து கொல்கிறது..!

துரத்தும் நினைவுகளால்
உறக்கம் தொலைந்து கலக்கம் படர்கிறது ..!

வலிக்கும் உணர்வுகளும் மரத்து போனாலென்ன?
துடிக்கும் இதயமும் உறைந்து போனால் தான் என்ன?

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (4-May-17, 3:34 pm)
பார்வை : 366

மேலே