கலவ செய்தாள்
வில் விழியால் எனை விளித்தாள்
யான் மீறேன் என நினைத்தாள்
மெய் நெருங்க கரம் மறுத்தாள்
முகம் சிணுங்க அவள் சிரித்தாள்
மோக மூச்சில் அனல் தெளித்தாள்
நான் வெட்க அதை அழித்தாள்
மலர் படுக்கை தனை விரித்தால்
அவள் மலர்வாள் என நினைத்தால்
பூ மலர் அதை களைந்தாள்
என் மடிமேல் மெல்ல துயில்ந்தாள்
நூல் ஆடை சுமை என்றாள்
தன் விரலால் நூல் பிரித்தாள்
நான் கலவ மெல்ல குழைந்தாள்
நான் பணிய அவள் கலந்தாள்
இனி ஏனும் யான் இருந்தால்
உயிர் உறைவேன் என நினைத்தாள்
மெல்ல தன் மெய் பிரித்தாள்
சொப்பனம் கலைய அவள் பறந்தாள்
$வினோ..