உன்னைக் கண்டேன்
உன்னைப் பார்க்க இயலாதால்
என் கண்களை வெறுத்தேன்...
உன் குரலைக் கேட்க இயலாததால்
என் செவிகளை வெறுத்தேன்...
உன்னுடன் பேச இயலாததால்
என் உதடுகளை வெறுத்தேன்...
உன்னைத் தழுவ இயலாததால்
என் கைகளையும் வெறுத்தேன்...
உன்னுடன் நடக்க இயலாததால்
என் கால்களையும் வெறுத்தேன்...
இப்படி அனைத்தையும்
வெறுத்த எனக்கு
என் இதயத்தை வெறுக்க மனமில்லை
ஏனெனில்,
அங்கு உன்னைக் கண்டேன்...!