என் பெயரில் அவள்பெயர் எழுத்துக்கள்

முன்பெல்லாம்
என் பெயரை
எழுதியும்
உச்சரித்தும்
பார்க்கும்போதெல்லாம்
அவ்வளவு சுவாரசியமும்
மகிழ்வும் இருந்தது இல்லை !
எனக்கு !

உன் பெயரில் உள்ள இரண்டு
எழுத்துக்கள் என் பெயரிலும்
இருப்பதை பார்த்து !

என் பெயர் எவ்வளவு அழகு
என்று மகிழ்வோடு என் தாய் தந்தைக்கு
நன்றிகள் கூறிக்கொள்கிறேன்

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (6-May-17, 7:47 pm)
பார்வை : 117

மேலே