பூக்கள்தந்த பூவை என்னவள்

கற்பனையில் பூத்துக்குலுங்கும்
பூக்கள் பல என் கண்முன் வந்து
காட்சி தந்தபோது ,என்னவளே
அந்த ஒவ்வொரு பூக்களிலும்
உன்னைக் கண்டேன் உன் அழகைக் கண்டேன்

அதோ தெரியும் அந்த பூஞ்சோலை
தடாகத்தில் அன்றலர்ந்த
சிவந்த தாமரைகள் பூத்து குலுங்கிட
பூத்திருந்த தாமரையில் உன்
அழகிய சிவந்த முகத்தை கண்டேன்

சற்றே திறந்த உன் அதரங்கள்
இடையே தெரியும் உள்ளடங்கிய
வெண்பற்கள் உதிர்க்கும்
மோகனசிரிப்பை அதோ
அந்த முல்லை சாரங்களில் கண்டேன்

சங்கு புஷபங்களில் உன் அழகிய
காதுகள் கண்டேன் அந்த காது
நுனியில் நீ அணிந்த வைரத்தோடுகளை
அலர்ந்த சிறு நந்தியாவட்டைகளில் கண்டேன்

தொடுத்த காந்தள் மலரோ உன் கழுத்தின்
நீண்ட ஆரம்

வெட்சிப்பூ மொட்டுகள் கண்டேன்
உன் கைகளின் நீண்ட விரல்கள் கண்டேன்

திலகம் பூவில் உன் நெற்றி
திலகம் கண்டேன்

நீண்டு அடர்ந்த தாழம்பூவில்
கண்ணே உன் கூந்தல் கண்டேன்

அதோ தெரியும் வன்னிப்பூ
அதில் உந்தன் கால்களின்
வெள்ளி கொலுசைக் கண்டேன்

அனிச்சமலரைக் கண்டேன்
அதில் உன் நாணத்தைக் கண்டேன்

இப்படி காணும் வண்ண பூக்களில்
எல்லாம் உன் அழகிய ரூபங்கள்
அமைந்து என்னை கவர்ந்தவளே
பூவையே என்னவளே
நீ எப்போதும் என் கண்களை விட்டு
அகல்வதே இல்லையடி !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-May-17, 12:10 pm)
பார்வை : 134

சிறந்த கவிதைகள்

மேலே